Friday, March 17, 2023

ஜென் கதைகள் - விருந்து

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்ததுறவி என்றால் மிகவும் பிடிக்கும். 

ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில்,சீடர்கள். அவரிடம்"குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர்"குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்தகதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையைசொல்ல ஆரம்பித்தார். 

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரைஎழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார். 

இவர்களது உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. 

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம்"நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்றுசொல்லிச் சென்றார். 

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரைஓடியதைப் பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்"என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார். 

பின் அவர்களிடம்"பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார். 

Tuesday, September 13, 2016

தன்னம்பிக்கை - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்



ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

Monday, September 12, 2016

நாய் வால் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

நாய் வால் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்
நாய் வால் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

Sunday, September 11, 2016

தந்திரம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

காட்டில் சிங்கம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.  அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது.  அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும். 

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என தீர்மானம் போட்டது. 

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன.  நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது,  எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையடக்கூடாது,  நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என கூறியது.

சிங்கமும் சரி என கூறியது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு  உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும்.  மிகுந்த கவலையுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு கிணற்றை பார்த்தது.  ஒரு முடிவுக்கு வந்த முயல், பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜவிடம் சென்றது.

சிங்கராஜவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது,  அதற்க்கு முயல் "சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என கேட்டது. நான் சொன்னேன், எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று" 

அதற்க்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை,  இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியது 

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது.

தந்திரம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது.

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது.

Saturday, September 10, 2016

வாழ்க்கைப் பயணம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

வாழ்க்கைப் பயணம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

வாழ்க்கைப் பயணம் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்


உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

Thursday, August 25, 2016

சோதனையை வெல் - தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்

சோதனையை வெல் -  தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்


ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது; நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். 

சோதனையை வெல் -  தன்னம்பிக்கை & நீதிக்கதைகள்


கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். 

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. 

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.

தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது. 

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். 

மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். 

பலவீனமே பலம் - தமிழ் சிறுகதைகள்

பலவீனமே பலம்-தமிழ் சிறுகதைகள்
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.

ஒரே ஒரு குத்து - பலவீனமே பலம் - தமிழ் சிறுகதைகள்

ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு குத்து போதும் உனக்கு” என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் … நீங்கள் நினைத்தது சரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும்.
”எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “ இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை”
குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.